×

புதுப்பேட்டை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு

பண்ருட்டி, நவ. 6: கடலூர் மாவட்டம் முழுவதும் திறந்தவெளி மலம் கழித்தல் தடுப்பு விழிப்புணர்வு மத்திய அரசு மூலம் ஏற்படுத்தப்பட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது விழிப்புணர்வு நாடகங்களும், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சியில் மத்திய அரசின் தர குழு ஆய்வாளர் சிவசுரேந்திரன் தலைமையில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேட்டாமேடு பாரதியார் நகர், மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் திறந்தவெளி மலம் கழித்தல் சம்பந்தமாக ஆய்வு செய்தனர். இதில் 100 சதவீதம் திறந்தவெளியில் மலம் கழிக்கவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து பொதுமக்களிடம் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர். ஆய்வின்போது துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் உடன் இருந்தனர்.

Tags : Central Panel Study ,Pudget Panchayat ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு