×

கடையம் மாலிக் நகரில் பயணிகள் நிழற்குடை

கடையம், நவ.6: கடையம் அடுத்த மாலிக் நகரில் ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை பூங்கோதை எம்எல்ஏ திறந்து வைத்தார்.கடையம் அடுத்துள்ள மாலிக் நகரில் இருந்த சேதமடைந்த நிழற்குடை பயணிகள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதனை அகற்றி புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து பூங்கோதை எம்எல்ஏ தனது சட்டமன்ற தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் செலவில் புதிய பயணிகள் நிழற்குடையை கட்டி திறந்து வைத்தார்.

இதில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மசெல்வன், கடையம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தங்கராஜா, கிளை செயலாளர் அகமது இசாக், முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் பீர் முகம்மது, ஜமாத் தலைவர் முகமது ஆதம் யூசுப், முன்னார் ஜமாத் தலைவர் தாவுது சாகிப்,  ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது , அஸ்லிம், ஹக்கிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : shop ,tourist nightclub ,Malik ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி