×

வள்ளியூர் பகுதிகளில் ஞானதிரவியம் எம்பி நன்றி தெரிவிப்பு

வள்ளியூர், நவ.6: வள்ளியூர் பகுதிகளில் ஞானதிரவியம் எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.வள்ளியூர் சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளான வேப்பிலான்குளம், கும்பிளம்பாடு, மருதப்பபுரம், கால்கரை, பெத்தரங்கபுரம், ராமச்சந்திரநகர், தனக்கர்குளம், நக்கநேரி, சங்கநேரி, இருக்கன்துறை, அடங்கார்குளம், ஊரல்வாய்ெமாழி, மதகநேரி, செம்பிகுளம்,  வடக்கன்குளம், லெப்பை குடியிருப்பு, காவல்கிணறு ஆகிய பகுதிகளில்  ஞானதிரவியம் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதில் திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரஹாம்பெல், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ்,பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி, வள்ளியூர் நம்பி, பேரூர் செயலாளர் வள்ளியூர் சேதுராமலிங்கம், பணகுடி தமிழ்வாணன், மாவட்ட பிரதிநிதி ஆச்சியூர் ராமசாமி, மு.க.மாணிக்கம், அசோக்குமார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், துலுக்கர்பட்டி ஷேக், ஒன்றிய இளைஞர் அணி சிவா, தில்லை, சிவா, லட்சுமணன், கோபி கோபாலகிரூஷ்ணன், மந்திரம், ஊராட்சி கழக செயலாளர்கள் முத்துகுமார், முருகேசன்,குமார் உட்பட பலர் கலந்துகொணடனர்.

Tags : Valliyoor ,Gannadiravaram ,areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...