×

நெல்லை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து அபாயம்

பணகுடி, நவ.6: நெல்லை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலை ஓரங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
நெல்லை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள பணகுடி பாம்பன்குளம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையை யொட்டி மழை காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது.தற்போது தெற்கு வள்ளியூர் பகுதியில் இருந்து கள்ளிகுளம் செல்லும் பாதை அடைக்கப்பட்டதாலும் திருச்செந்துர் மற்றும் நெல்லைக்கு சாத்தான்குளம், ராதாபுரம் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் பாம்பன்குளம் வழியாகதான் திரும்பி செல்கிறது. தொடர்ந்து வாகன போக்குவரத்து காரணமாக நான்குவழிச்சாலையை ஒட்டிய பகுதிகளில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல பணகுடி பகுதியில் பல இடங்களில் சாலை பகுதிகளை ஒட்டிய தெருக்கள்,  பழுதடைந்து மக்கள் போக்கு வரத்துக்கு சரியில்லாதவாறு சாலைகளும் தெருக்களும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெரும் விபத்துகள் நடக்கும் முன்பு பள்ளங்களை சீரமைக்கவேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த இளையபெருமாள் கூறும் போது, கடந்த மாதம் கிராமங்கள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. அதில் சாலைகள், தெருக்களை சீரமைக்க கோரி பலமுறை பேருராட்சி நிர்வாகத்திடமும் மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை என்கிறார்.

Tags : accident ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!