×

நெல்லை-மதுரைக்கு ‘ஏசி’ பஸ்கள் இயக்கம்

நெல்லை, நவ. 6: நெல்லையில் இருந்து மதுரைக்கு புதிய ‘ஏசி’ பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு 5 ஏசி பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  நெல்லை - தூத்துக்குடி, நெல்லை - தென்காசி, நெல்லை - மதுரை, நெல்லை - நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் புதிய ஏசி பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.நெல்லையில் இருந்து மதுரை செல்லும் புதிய ‘ஏசி’ பஸ்களை, நேற்று புதிய பஸ் நிலையத்தில் அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 நிகழ்ச்சிக்கு கலெக்டர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை  கணேசராஜா, விஜிலா சத்யானந்த் எம்பி, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ, மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாநகர் மாவட்ட அவைத்  தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூர் வேலாயுதம், ஜெ. பேரவை மாவட்ட தலைவர் வக்கீல் ஏ.கே.சீனிவாசன்,  ஹரிகர சிவசங்கர், பகுதி செயலாளர்கள்  வக்கீல் ஜெனி, மோகன், ஹயாத், சிறுபான்மை பிரிவு புறநகர் மாவட்ட செயலாளர் கேபிரியல் ஜெபராஜன், பேரவை இணை செயலாளர் கணபதிசுந்தரம், அண்ணா தொழிற்சங்கம்  வேல்பாண்டியன், மண்டல தலைவர் பகவதிமுருகன் மற்றும் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்  திருவம்பலம்பிள்ளை, பொதுமேலாளர் துரைராஜ், கோட்ட மேலாளர்கள் சாலமன்,  டேனியல், மாணிக்கம், சுப்பிரமணியன், சசிகுமார் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : AC ,
× RELATED வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை...