×

அரசு தலைமை மருத்துவமனையில் உலா வரும் தெருநாய்கள் கூட்டம்

விருதுநகர், நவ.6: தரச்சான்று  பெற்ற அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுற்றிதிரியும் தெருநாய்களால்  நோயாளிகள், உறவினர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய அவல நிலை தொடர்கிறது. விருதுநகர்  அரசு தலைமை மருத்துவமனையில் 500 உள் நோயாளிகளும், 1500 வெளிநோயாளிகளும்,  நோயாளிகளின் உறவினர்கள் என தினசரி 3 ஆயிரம் பேர் என 5 ஆயிரம் பேர் வந்து  செல்கின்றனர். அரசு தலைமை மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனையில் 20க்கும்  மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.

நோயாளிகளுக்கு வழங்கப்படும்  உணவுகள், நோயாளிகளுக்கு உறவினர்கள் கொண்டு வரும் உணவு மிச்சங்களை தின்று  மருத்துவமனை வளாகத்திலேயே சுற்றித் திரிகின்றன. பகல், இரவு நேரங்களில்  நோயாளிகள், உறவினர்களின் பின்னால் திரியும் நாய்களால் மருத்துவமனைக்கு  வருவோர் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தரச்சான்றுகள்  பெற்ற மருத்துவமனையின் வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட நாய்கள்  சுற்றித்திரிகின்றன. நாய்கள் சுற்றித்திரியும் மருத்துவமனைக்கு எப்படி  தரச்சான்று வழங்கப்பட்டது என்ற கேள்விகளை மருத்துவமனைக்கு வரும்  நோயாளிகளின் உறவினர்களும் எழுப்புகின்றனர்.ஆயிரக்கணக்கான நோயாளிகள்  வந்து செல்லும் மருத்துவமனையில் நாய்கள் கடித்து ரேபிஸ் உள்ளிட்ட கொடிய  நோய் வரும் முன்பாக நாய்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : crowd ,street vendors ,Government Head Hospital ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...