×

நிலவேம்பு குடிநீர் வழங்கல்

உடன்குடி, நவ. 6:  மெஞ்ஞானபுரம் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலைய சித்தமருத்துவர் ஜெகதீஷ் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதில் கல்லூரித் தாளாளர், முதல்வர், பேராசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருந்தாளுநர் ஆறுமுகம் செய்திருந்தார்.

Tags :
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்