×

35 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி

விருதுநகர், நவ. 6:விருதுநகர் அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜா, அவரது குடும்பத்தினர் 35 ஏக்கர் நிலத்தை அபகரிக்க நினைப்பதாக கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சூரங்குளத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது தாய், தந்தையுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: திருச்சுழி அருகே பிள்ளையார்குளம் வருவாய் கிராமத்தில் தந்தை சுப்பிரமணியன் மற்றும் எனது பெயரில் 35 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது பெரியப்பா மகனும், அமமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஜெயராஜா, அவரது மகன் சண்முகராஜா, ஜெயராஜாவின் தம்பி குமரேசன், உறவினர் ரகுநாதராஜா ஆகியோர் அபகரிக்கும் நோக்கில் டிராக்டர் மூலம் உழுதனர். அதை தடுக்க சென்ற என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இதுதொடர்பாக ஏ.முக்குளம் போலீசில் புகார் அளித்ததும், நிலத்தை தங்களுக்கு சொந்தமான நிலம் எனவும், அதற்கான ஆவணங்கள் அளிக்க 3 நாள் அவகாசம் வேண்டும் எனவும் போலீசில் கேட்டு சென்றனர். எனக்கு சொந்தமான நிலங்கள் என்பதற்கான ஆவணங்களை போலீசிடம் சமர்ப்பித்தேன். எதிர்தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. ஏ.முக்குளம் போலீசார் அக்.12ம் தேதி குமரசேன், கண்ணன், ரகுநாதராஜா ஆகியோரை அழைத்து, எதிர்தரப்பிற்கு சொந்தமான நிலங்கள் என ஆணவங்கள் இருந்ததால் நீதிமன்றத்தை நாடி தீர்வு கண்டு கொள்ளும்படி தெரிவித்து அனுப்பினர்.
இதையடுத்து எனக்கு சொந்தமான நிலத்தை நவ.2ம் தேதி உழுது கொண்டிருந்தேன். குமரேசன், கண்ணன், ரகுநாதராஜா ஆகியோர் என்னை தடுத்து நிலத்தை உழுதால் கொன்று புதைத்து விடுவோம் என மிரட்டினர். ஏ.முக்குளம் போலீசில் புகார் அளித்தேன். அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜா குடும்பத்தினர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். நிலத்தை மீட்டு தருவதோடு எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...