×

பெயரளவுக்கு சீரமைத்த மெயின்பஜார் சாலை ஆத்தூரில் காற்றில் பறக்கும் புழுதிபடலம்

ஆறுமுகநேரி, நவ. 6: ஆத்தூரில் பெயரளவுக்கு சீரமைத்த மெயின் பஜார் சாலையில் காற்றில் பறக்கும் புழுதிப்படலத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். ஆறுமுகநேரி அடுத்த     ஆத்தூர் முதல் அடைக்கலாபுரம் வரை தற்போது சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.  இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.  இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் கடந்த 2ம் தேதி சஷ்டி விழா நடந்தது. இதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் சாலைகளே இல்லாத பகுதிகளில் ஜல்லியும் அதனுடைய மணலையும் கொண்டு தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் தற்போது இரு தினங்களாக ஆத்தூர் மெயின் பஜார் முழுவதும் வீசும் காற்றில் கடுமையான புழுதிப்படலம் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக மாணவ, மாணவிகள் சாலையில் செல்லமுடியாத அளவுக்கு காற்றில் புழுதி பறக்கிறது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினருக்கு வியாபாரிகள் சங்கத்தினர் தகவல் தெரிவித்தும் பலனில்லை. எனவே, இதுவிஷயத்தில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Mainbazaar Road ,Atur ,
× RELATED சேலம் அருகே காரில் வந்து...