உடன்குடி நயினார்பத்தில் தெருவிளக்குகள் சீரமைப்பு

உடன்குடி, நவ. 6:   நயினார்பத்தில் பல மாதங்களாக எரியாமல் கிடந்த தெருவிளக்குகள்  தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டுள்ளன. உடன்குடி ஒன்றியம், நயினார்பத்து ஊராட்சி 6 வார்டுகளை உள்ளடக்கியதாகும். இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் முறையாக சீரமைக்கபடாமல் பல மாதங்களாக பழுதடைந்து காணப்பட்டதால் பெரும்பாலான இடங்கள் இரவில் இருளில் மூழ்கின. இதனால் அவதிப்பட்ட மக்கள் நேற்று முன்தினம் இரவு தீப்பந்தம் ஏற்றினர். இதுகுறித்த தினகரனில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர், எரியாத விளக்குகளை சீரமைத்தனர். மேலும் மின்விளக்குகள் எரியாத பகுதிகளில் விரைந்து தக்க நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Tags :
× RELATED சிதிலமடைந்த அரசு பள்ளி சீரமைப்பு