மதுரை காமராஜர் பல்கலைகழக அளவிலான பெண்கள் ஜூடோ போட்டியில் இரண்டாம் இடம்

உத்தமபாளையம், நவ. 6: மதுரை காமராஜர் பல்கலைகழக மண்டல அளவிலான பெண்களுக்கான ஜூடோ போட்டியில் உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரி இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தது. மதுரை காமராஜர் பல்கலைகழக கல்லூரிகளுக்கு இடையிலான ஜூடோ போட்டிகள் உசிலம்பட்டி பி.எம்.டி.கல்லூரியில் நடந்தது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரி அணி 48 கிலோ முதல் 52 கிலோ எடைபிரிவில் இளங்கலை வணிகவியல் (பி.பி.ஏ), மாணவி நந்தினி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார். இவரை பள்ளியின் ஆட்சிகுழு தலைவர் செந்தல்மீரான், தாளாளர் தர்வேஷ்மைதீன், பள்ளி முதல்வர் ஹெச்.முகமதுமீரான் ஆகியோர் பாராட்டினர். கல்லூரியின் உடற்கல்வித்துறை பேராசிரியர் அக்பர்அலி நன்றி கூறினார்.

Tags : Madurai Kamarajar University Runners-up ,Girls Judo Competition ,
× RELATED ஓடிபி நம்பர் திருட்டைத் தடுக்க புதிய...