×

கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா

கம்பம், நவ. 6: கம்பம் ஒக்கலிகர் கவுடர் சமுதாயத்தின் சார்பில், பகவதியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு சமுதாய நாட்டாண்மை காந்தவன் தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் அமர்நாத் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். முதல்நாள் நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நந்தகோபாலன் கோயில் வளாகத்தில் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளில் மஞ்சள் கலந்த தண்ணீரை வைத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தவர்கள் மஞ்சள் நீரை ஒருவருக்கொருவர் தெளித்து கொண்டாடினர். மஞ்சள் நீராட்டில் இளைஞர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி அழைப்பு, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கம்பம் ஒக்கலிகர் கவுடர் சமுதாய விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Yellow Watering Ceremony ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?