×

சாலை ஓரத்தில் காவு வாங்க காத்திருக்கும் கிணறு

காளையார்கோவில், நவ.6:  காளையார்கோவில் அருகில் உள்ள குருந்தணி கிராமத்தில்  இருந்து நற்புதம் செல்லும் சாலை ஓரமாக உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குருந்தணி கிராமத்தில் இருந்து நற்புதம் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னால் உள்ள வளைவில் அபாயகரமான கிணறு உள்ளது. அக்கிணற்றில் உள்ள தண்ணீரை குறுந்தணி மற்றும் நற்புதம் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். நற்புதம், சாணாவூரணி, அரசகுளம், அணியவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் முக்கியச் சாலையாக இது உள்ளது.

இச்சாலை வழியாக  பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் அதிகளவில் செல்கின்றனர். கிணறு திறந்தநிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லை. இதனால் அபாயகரமான வளைவில் நிலை தடுமாறி வாகனங்கள் உள்ளே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலைப்பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. அதோடு சேர்த்து குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணற்றிற்கும் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்து இருந்திருக்கலாம். இது குறித்து பலமுறை  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பாக தடுப்புச் சுவர் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags :
× RELATED நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர்...