×

பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

திருவாடானை, நவ. 6: சி.கே.மங்கலத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே பள்ளி நேரத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு தொண்டி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் என பல்வேறு ஊர்களில் இருந்து கிராமப்புற மாணவர்கள் பஸ்ஸில் வந்து படித்து செல்கின்றனர்.

காலையில் பள்ளிக்கு வரும்போது பஸ்சில் அதிகளவு கூட்டம் இருப்பதில்லை. ஆனால் மாலை நேரம் பள்ளி விடும்போது பஸ்களில் ஏற்கனவே வெளியூரிலிருந்து வரும் பயணிகள் அதிகம் பயணிக்கின்றனர். இதனால் சி.கே.மங்கலத்தில் பள்ளி மாணவர்கள் பஸ் ஏறும் போது உள்ளே இடமில்லாமல் படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலநிலை இருந்து வருகிறது. அதிலும்  குறிப்பாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பஸ்ஸில் மாலை நேரத்தில்  பள்ளி மாணவர்கள்  படிக்கட்டுகளில் தொங்கியபடியே  செல்கின்றனர். எனவே பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : School students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்...