×

டெல்லியில் வக்கீல்கள் மீது தாக்குதல் ஐகோர்ட் கிளையில் கண்டனக் கூட்டம்

மதுரை, நவ. 6: டெல்லியில் வக்கீல்கள் மீது, போலீசார் தாக்குதலை கண்டித்து, ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று கண்டன கூட்டம் நடைபெற்றது.
டெல்லி ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வக்கீல்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் வக்கீல்கள் நேற்று முன்தினம் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐகோர்ட் கிளை மெயின்கேட் முன் பகுதியில் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் ெதரிவிக்கும் வகையில் கூட்டமாக நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் துரைப்பாண்டியன், ராமமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி, நிர்வாகிகள் இளங்கோ, வெங்கடேசன், ஆனந்தவள்ளி, சாமித்துரை, மகேந்திரபதி, சாரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : lawyers ,Delhi ,
× RELATED வணிகர் சங்கங்கள் பேரமைப்பு...