×

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.6: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (ஏ.ஐ.ஒய்.எப்) சார்பில், உலகப்பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை அவமானப்படுத்திய குற்றவாளிகளையும், சமூக வலைப்பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசிய கயவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

தலைவர் முருகேசன், பொருளாளர் கே.கே.முருகேசன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் திராவிடமணி, முன்னாள் செயலாளர்கள் சுரேஷ், செல்வராஜ், இளைஞர் பெருமன்ற துணை செயலாளர் சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர். துணைத்தலைவர் ராஜாமுகமது நன்றி கூறினார்.

Tags : Thiruvalluvar ,youth protest ,
× RELATED குமரியில் திருவள்ளூவர் சிலை,...