×

பெல் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி மதிப்பிலான சில்லா புனல் மின் திட்ட ஆணை

திருச்சி, நவ.5: சில்லா புனல் மின் திட்டத்தின் புனரமைப்பு, நவீனமயம் மற்றும் மேம்பாட்டுக்கான ஆணையை பெல் நிறுவனம் பெற்றது.சில்லா புனல் மின் திட்டத்தின் நான்கு 36 மெகா வாட் அலகுகளில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான புனரமைப்புப் பணிகளுக்கான இந்த ஆணையை உத்தராகண்ட் புனல் மின் நிறுவனத்திடமிருந்து பிஹெச்இஎல் பெற்றுள்ளது. உத்தராகண்ட்டின் பௌரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில் உள்ள 36 மெவா அலகுகள் நான்கும் தலா 39 மெவா திறனுள்ளவையாக மேம்படுத்தப்படும்.கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த அலகுகளின் புனரமைப்பு பணிகள் முடிவடைகையில் அவற்றின் திறன், மின்னுற்பத்தி மற்றும் செயல்திறன் மேம்படுவதுடன், அலகின் கிடைக்கும் தன்மை மற்றும் ஆயுளும் கூடும். மின்துறையில் வளங்களுக்கான தட்டுப்பாடு நிலவும் தற்போதைய சூழலில், பழைய புனல்மின் திட்டங்களின் புனரமைப்பு, புதிய திட்டங்கள் அமைப்பதுடன் ஒப்பிடுகையில், சிக்கனமானதும், குறைவான நேரம் எடுப்பதாகவும் இருப்பதால் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் விசையாழிகள், மின்னாக்கிகள், வேகக் கட்டுப்படுத்திகள், கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், இதர உபகரணங்களின் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிர்மாணித்தல், சோதித்தல் மற்றும் இயக்கிவைத்தல் பணிகளை பிஹெச்இஎல் மேற்கொள்ளும். அரசின் இந்தியாவிலேயே தயாரிப்பது இயக்கத்தினை ஊக்குவிக்கும் வண்ணம் இத்திட்டத்திற்கான பிரதான உபகரணங்களை நிறுவனத்தின் போபால், ஜான்சி, ருத்ராபூர் மற்றும் பெங்களூரு பிரிவுகள் தயாரித்து வழங்கும். களத்தில் கட்டமைப்புப் பணிகளை நொய்தாவிலுள்ள நிறுவனத்தின் வடக்கு மண்டல ஆற்றல்துறை மேற்கொள்ளும்.பிஹெச்இஎல் நாடெங்கும் சுமார் 2,900 மெவா அளவிற்கும், பூட்டானில் 2,220 மெவா மற்றும் இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான், அஜர்பெய்ஜான், பூடான், மலேசியா, தாய்வான், தஜிகிஸ்தான், ருவாண்டா, தாய்லாந்து, நியுசிலாந்து, நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பிஹெச்இஎல்-லின் புனல்மின் அலகுகள் செயல்திறனுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

Tags : Bell ,
× RELATED மதுரை அருகே ‘மற்றொரு கீழடி’ 2,500 ஆண்டு...