×

சுவாமி ஊர்வலம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் மறு உத்தரவு வரும் வரை தெருக்களில் வீதியுலாவுக்கு தடை

மன்னார்குடி, நவ. 6: மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் சுவாமி ஊர்வலம் தொடர் பாக இரு சமூகத்தினரிடையே தொடர் மோதல் நடைபெற்று வந்த நிலையில் பிரச்னை குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்ட த்தில் மறு உத்தரவு வரும் வரை தெருக்களில் சுவாமி வீதியுலா நடத்துவதற்கு ஆர்டிஓ தடை விதித்து உத்தரவிட்டார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் காவல் சரகத் திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்த மான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகநாத சுவாமி,  தேவி, பூதேவி மற்றும் சாஸ்தா வீரப்பன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் சுவாமி ஊர்வலம் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்தது. கோயில் திருவிழா காலங்களில் சுவாமி ஊர்வலம் ஒரு சமூகத்தினர் வசிக்கும் தெரு வழியாக செல்வதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் தொ டர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் ரெங்கநாதபுரம் சுவாமி ஊர்வலம் தொடர்பாக இரு தரப்பின ரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக மீண்டும் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார்ர் ஜெயபாஸ்கர் மற்றும் இரு சமூகத்தை சேர்ந்த தரப்பில் இருந்து தலா 5 பேர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக் கோட்டி பிறப்பித்த உத்தரவில், ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதி வழியாக சுவாமி ஊர்வலம் வர விடுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முடிவெடுக்க எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் கால அவகாசம் கேட்டனர். ஏற்கனவே போதுமான அளவு கால அவகாசம் வழங்கப் பட்டு விட்டதால் சாமி விதித்துள்ள தொடர்பாக மேற்கண்ட கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கோயிலின் பிரகாரத்திற்குள்ளேயே ஊர்வலம் நடத்தப்பட வேண்டும். ஏக்காரணம் கொண்டும் மறு உத்தரவு வரும் வரையில் கிராமத்தில் எந்த தெருக்குள்ளும் சுவாமி ஊர்வலம் செல்ல கூடாது. மேலும் இரு தரப்பினரும் தங்களுக்குள் பேசி அதில் முடிவு எட்டப்பட பின்னர் இருவரும் சேர்ந்து அனுமதி கோரினால் சுவாமி ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது குறி த்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு தனது உத்தரவில் ஆர்டிஓ புண்ணியக்கோட்டி குறிப்பிட்டுள்ளார்.

Tags : streets ,Swami ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...