×

ஸ்கூட்டி வழங்கும் திட்டம் 2,970 பயனாளிகளுக்கு ரூ.6.97 கோடி மானியம்

திருவாரூர், நவ.6: திருவாரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு மானியத்துடன் வழங்கப்படும் ஸ்கூட்டர் திட்டத்தில் இதுவரையில் ரூ 6 கோடியே 97 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையிலும் ,நாகை எம்பி செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் 715 பயனாளிகளுக்கு ரூ ஒரு கோடியே 78 லட்சத்து 75 ஆயிரம் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டி மற்றும் 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ33 லட்சம் வங்கி கடன் போன்றவற்றினை அமைச்சர் காமராஜ் வழங்கி பேசுகையில், ஏழை எளிய சாதாரண மக்கள் நலத் திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த பெண்களுக்கு மானிய விலையிலான ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 715 பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து970 பயனாளிகளுக்கு ரூ 6 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் மானிய தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், டிஆர்ஓ பொன்னம்மாள், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் லேகா, நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், ஆர்டிஓ ஜெயபிரிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...