×

வீடு புகுந்து 2 பவுன் நகை திருட்டு

முத்துப்பேட்டை, நவ.6: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஆள்காட்டுவெளி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இதனால் இவரது மனைவி அகிலா(28) மற்றும் குழந்தைகள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அகிலா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாயார் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பின் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 2பவுன் நகை மற்றும் சில பொருட்களை திருடி சென்று இருப்பதை கண்டார். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அகிலா புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று பார்வைட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED நகை திருட்டு