×

மன்னார்குடி பழனியாண்டவர் கோயிலில் திருக்கல்யாணம்

மன்னார்குடி, நவ.6: மன்னார்குடி பழனியாண்டவர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடுவானிய தெருவில் பிரசித்திபெற்ற பழனியாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி பழனியாண்டவருக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி பழனியாண்டவருக்கு தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக பழனியாண்டவர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : pilgrimage ,Mannargudi Palaniyadavar Temple ,
× RELATED காங். சார்பில் ஏர் கலப்பை யாத்திரை