திருவையாறில் வேளாண் திட்ட பணிகள் ஆய்வு

திருவையாறு, நவ. 6: திருவையாறு வேளாண்மை துறை அலுவலகத்தில் திட்ட பணிகளை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) சிங்காரம் ஆய்வு செய்தார்.அப்போது திருவையாறு வேளாண் அலுவலகம், வயல்வெளிகளில் செயல்படுத்தப்பட்ட மானிய திட்டங்களை ஆய்வு செய்தார். குறிப்பாக நுண்ணீர் பாசன திட்டம் தொடர்பாக பதிவு செய்தல், மதிப்பீடு செய்தல், அனுமதி வழங்கி பணியாணை வழங்கியது. பணிகள் முடித்த விவரம், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

மேலும் வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆகியோரின் அட்மா திட்ட பணிகள், இலக்கு மற்றும் சாதனை குறித்து ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். அப்போது பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்களின் பதிவேடுகளை ஆய்வு செய்து பணியை உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது வேளாண்மைத்துறை அனைத்து அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திருவையாறில் கோயில் கட்டும் பணியை...