கொடியேற்று விழா

பாபநாசம், நவ. 6: ஏஐடியூசி நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் பாபநாசம் வட்டாரம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது.
அதன்படி பாபநாசத்தில் வங்காரம்பேட்டை, 108 சிவாலயம், காணியாளர் தெரு, சின்ன கடைத்தெரு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன், மாவட்ட துணைத்தலைவர் சவுந்தரராசன், தர்மராஜ், சங்கர், லெனின் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Flag ceremony ,
× RELATED வத்தலக்குண்டுவில் திமுக கொடியேற்று விழா