×

வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 6: கல்லணை- தோகூர் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள பிள்ளை வாய்க்காலில் கடநத 4ம் தேதி மாலை ஒருவர் தண்ணீரில் இறந்து கிடப்பதாக விஏஓவுக்கு தகவல் வந்தது.விஏஓ குணவதி சம்பவ இடத்துக்கு வந்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் கருணாகரன் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வாய்க்காலில் இறந்து கிடந்தவருக்கு 65 வயது இருக்கும், அவர் குளிப்பதற்காக இறங்கியபோது தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சோழவரம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு