×

கண்டியாநத்தம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்


பொன்னமராவதி,நவ.6: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு முகாம் ‌நடைபெற்றது.பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் அங்கன்வாடி கட்டிடம்‌ அருகே கால்நடைளுக்கு கோமாரி நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஆலவயல் கால்நடை மருத்துவர் ராமநாதன் தலைமையும், பொன்னமராவதி கால்நடை மருத்துவமனை மருத்துவர் ரவிச்சந்திரன் முன்னிலையும் வகித்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமினை இலுப்பூர் கால்நடை உதவி இயக்குனர் பாண்டி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலவயல் கூட்டுறவு சங்க இயக்குனர் அழகு கண்டியாநத்தம் ஊராட்சி செயலாளர் அழகப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Livestock vaccination camp ,village ,Kandiyanatham ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...