×

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

புதுக்கோட்டை, நவ. 6: புதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) பழனியப்பா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளான புயல், பெருவெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படும் தருணங்களில் மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை பயிர் காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்டால் வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு உண்டான காப்பீட்டு தொகையான ரூ. 29000 ல் விவசாயிகள் செலுத்த வேண்டிய 3சதவீத பிரிமிய தொகை ரூ.870 - ல், 1.5 சதவீத பிரிமிய தொகை ரூ. 435 செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள 1.5 சதவீத பிரிமிய தொகை ரூ. 435 யை மத்திய மாநில அரசுகளால் சரிபாதியாக பிரித்து செலுத்தப்படும்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றுடன் உரிய கட்டணத் தொகையை தொடர்புடைய பொது சேவை யைங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம். சம்பா பருவத்தில் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீட்டிற்கான பிரிமியத்தொகையான ரூ. 435 - செலுத்துவதற்கான கடைசி நாள் டிசம்பர் மாதம் 15-ம் தேதி ஆகும். மேலும் விபரங்களுக்கு சித்தன்னவாசல் உதவி வேளாண்மை அலுவலர் பெ.மகாலெட்சுமி 9894204739, குடுமியான்மலை உதவி வேளாண்மை அலுவலர் அருண்மொழி 6385288651, நார்த்தாமலை வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் 9994903827, வீரப்பட்டி உதவி வேளாண்மை அலுவலர் சாவித்திரி 8098568113, இலுப்பூர் உதவி வேளாண்மை அலுவலர் பிரியா 978896376, ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Insure Samba Rice ,Pudukkottai District ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...