×

கறம்பகுடி சாலையில் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் முட்செடிகள்

கந்தர்வகோட்டை, நவ.6: கந்தர்வகோட்டையில் கறம்பகுடி சாலை ஓரத்தில் நீண்டு வளர்ந்துள்ள முட்செடிகள் வாகன ஓட்டிகளை பதம்பார்த்து வருகிறது. அவைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.கந்தர்வகோட்டையில் கறம்பகுடி சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சாலையோரத்தில் ஒரு புறம்மட்டும் முட்செடிகள் நீண்டு வளர்ந்துள்ளன. இது அவ்வழியாக வருபவர்களை பதம்பார்க்கிறது.அதிலும் கனரக வாகனங்கள் வரும்போது இருச்சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையின் ஓரத்திற்கு வரும்போது முட்செடிகள் உடலில் கீறல்களை ஏற்படுத்துகிறது.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து காட்டுநாவலை சேர்ந்த சுப்பிரமணியன் கூறும்போது,இந்த சாலையோரத்தில் அபாயகரமாக முட்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றை 100 நாள் வேலை செய்பவர்களை கொண்டு அகற்றினால் பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கும். எனவே அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags : motorists ,road ,
× RELATED எல்லப்பநாயக்கன்குளத்து வாய்க்கால் முட்செடிகளை அகற்றிய இளைஞர்கள்