×

கறம்பக்குடி ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறுகள்

கறம்பக்குடி, நவ.6: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் பயன்படுத்தாத ஆழ்குழாய் கிணறுகள் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் என்ற சிறுவன் உயிர் இழந்தான். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறந்த நிலையில் உள்ள மற்றும் பயன் பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர் இதன் அடிப்படையில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பாக கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவள்ளி, செயலர் மாவட்ட ஊராட்சிகள் புதுக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் லட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன் ,முத்துராமன் ,செந்தில் குமார் ,வசந்தா மற்றும் ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் ஆள்துளை கிணறுகள் பாதுகாப்பு முறையில் உள்ளனவா என ஆய்வு செய்தனர்.

இதில் தீத்தானிப்பட்டி ,குலந்ரான்பட்டு ,ரான்கியன் விடுதி ரெகுணாதபுரம் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு செய்து திறந்த நிலையில் இருந்த பயன்படாத ஆழ்துளை கிணறுகளை அனைத்தையும் மூடினர். மேலும் தற்போது பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் ஆழ்துளை கிணறுகளை பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் அலுவலர்கள் ஈடு பட்டு வருகின்றனர். மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளை பயன் படுத்தாமல் இருந்து திறந்த நிலையில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் ஊராட்சி செயலர்கள் ஆய்வு செய்து ஒன்றிய அலுவலர்களிடம் அறிக்கை அளித்து வருகின்றனர். குறிப்பாக அந்தந்த ஊராட்சி செயலர்கள் ஊராட்சிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்

Tags : wells ,Karambakkudi ,
× RELATED மோடியும், எடப்பாடியும் தம்பதி போல்...