கீழ உசேன் நகரத்தில் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது

பாடாலூர், நவ. 6: ஆலத்தூர் தாலுகா கீழ உசேன் நகரம் கிராமத்தில் 2 வீடுகளின்சுவர் இடிந்து விழுந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை கீழ உசேன் நகரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பழனியாண்டி என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல் அவரது வீட்டின் அருகே உள்ள சின்னராசா மனைவி வெண்ணிலா என்பவரின் வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் இருவரது வீட்டிலும் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories:

>