×

ஊழியரை தாக்கிய நீதிபதியை கண்டித்து அரியலூரில் நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,நவ.6: தூத்துக்குடியில் தட்டச்சு ஊழியரை தாக்கிய நீதிபதியை கண்டித்து அரியலூரில் நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்–்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் நீதிமன்ற வளாகத்தில்- தூத்துக்குடி நீதிபதியை கண்டித்து நீதித்துறை ஊழியர்கள், சங்கத்தலைவர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் சாரதியை தாக்கி காயப்படுத்திய நீதித்துறை நடுவர் எண் 1 நிலவேஷ்வரன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அரியலூர் நீதிமன்றம் முன்பு நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,Judicial Workers Union ,Ariyalur ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்