×

வேளாண் அறிவியல் நிலையத்தில் வீட்டில் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி

அரியலூர். நவ.6: வேளாண் அறிவியல் நிலையத்தில் வீட்டில் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க புதிய தொழில்நுட்ப பயிற்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் தொடங்கி வைத்தார். பின்னர் வீட்டின் பின்புறம் மாடித்தோட்டம் அமைப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் காய்கறி தோட்டத்தின் பயன்கள், இடத்தோ–்வு, பருவத்திற்கு ஏற்ற பயிர், வீட்டு, காய்கறித்தோட்டத்தின் பயன்கள், இடத்தேர்வு, பருவத்திற்கு ஏற்ற பயிர், வீட்டு காய்கறித்தோட்டத்தின் வரைபடம், பயிரிடும் முறைகள், நீர்ப்பாசனம், களையெடுத்தல், அறுவடை, ஓருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த பயிர் குறித்து 35க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Agricultural Science Center ,
× RELATED தா.பழூர் சோழமாதேவி கிராமத்தில் கிரீடு...