×

ஒரே நேரத்தில் அதிக பரப்பில் பூச்சிகொல்லி தெளித்து மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்



அரியலூர்,நவ. 6: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் மானாவாரி பயிராக 5,865 ஹெக்டேர் அளவில் மாக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிரில் படைப்புழுவின் தாக்குதல் ஒரு சில பகுதிகளில் காணப்படுகிறது.கடந்த ஆண்டு படைப்புழுவின் தாக்குதலால் பெரும் அளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டு தமிழக அரசால் மக்காச்சோள பயிருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுபடுத்ததுவதற்கு தமிழக முதல்வரால் ஒரே நேரத்தில் அதிக பரப்பில் பூச்சிக்கொல்லிகள் வேளாண்மைத்துறை மூலம் தெளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசு ஆணைப்படி 21 முதல் 45 நாட்கள் வயது உடைய மக்காச்சோளம் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணி திருமானூர் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்பைனிடோரம் என்ற பூச்சிக்கொல்லி ஏக்கருக்கு 100 மி.லி வீதம் விவசாய ஆர்வலர் குழு மற்றும் சேவை அளிப்பவர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. சாத்தமங்கலம், பளிங்காநத்தம், வெங்கனூர், சன்னாவூர்(வ), சன்னாவூர்(தெ), கீழகொளத்தூர், வெற்றியூர், கீழையூர் , மேலப்பழுர், கீழுப்பழூர் ஆகிய கிராமங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதர கிராமங்களிலும் வரும் நாட்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெறவுள்ளது. திருமானூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் லதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த பரப்பில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் பணிகளை கீழப்பழுர் கிராமத்தில் அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, அரியலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் (தரக்கட்டுப்பாடு), ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...