×

தொகுப்பு வீடு மேற்கூரை பெயர்ந்து மூதாட்டி காயம்

மயிலாடுதுறை, நவ.6:மயிலாடுதுறை அருகே தொகுப்பு வீடு மேற்கூரை பெயர்ந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நத்தம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தம்புராஜ் மனைவி கொலுசம்மாள்(75). இவர் தனது பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து அவர் தலையில் விழுந்தது. இதனால் பலத்த காயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : accident ,
× RELATED துடியலூர் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி