×

பைக்கில் இருந்து தவறி விழுந்த போர்மேன் சாவு

கொள்ளிடம், நவ.6: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராஜேந்திரன்(45). இவர் கொள்ளிடம் அருகே உள்ள மாதானத்தில் உள்ள மின்சாரவாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி மாதானத்திலிருந்து புதுப்பட்டினம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Borman ,
× RELATED சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக போர்மேன் கைது