×

மக்கள் குறைதீர் முகாமின்போது மாற்றுத்திறனாளிகள் வாகனம் முறையாக பயன்படுத்தப்படுமா?

கீழ்வேளூர், நவ.6: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அப்போது மாற்று திறனாளிகளுக்கு என்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேர்த்து நடைபெறும். மாற்று திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நாகை மாவட்டத்தில் இருந்து கொள்ளிடம், குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை, செம்பனார்கோயில், நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் வருவார்கள்.பேரூந்தில் வந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக பேரூந்து நிறுத்தத்தில் இறங்குபவர்களை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கலெக்டர் அலுவலக வாசல் வரை அழைத்து செல்ல மாற்று திறனாளிகளுக்கு என்று தனி வாகனம் உண்டு.இந்த வாகனம் எப்போதாவது ஒருசில வரங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. மாற்றுதிறனாளிகளுக்கான வாகனம் இயக்கப்பட வில்லை என்றால் மூன்று வீல் சைக்கில், பைக் போன்ற வாகனங்களை பயன்படுத்தும் மாற்று திறனாளிகள் கொள்ளிடம், கோடியக்கரை போன்ற நீண்ட தூரத்தில் இருந்து எடுத்து வர முடியாது என்பதால் பேருந்தில் வந்து இறங்கி அங்கிருந்து மாவட்ட ஆட்சித் அலுவலக வாசல் வரை சுமார் 150 மீட்டர் தொலைவிற்கு வெயில் சூடு, சிறிய கற்கள் கொண்ட தார் சாலையில் தவழ்ந்து சென்று வருவது மாற்று திறனாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இனிமேலாவது மாற்று திறனாளிகளுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு என்று முகாம் நடத்தும் போது மாற்று திறனாளிகளை அழைத்து வரும் வாகனத்தை பயன்படுத்த நாகை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்று திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்பாக்கின்றனர்.

Tags : Offenders ,
× RELATED பின்தங்கிய முஸ்லிம் பெண்களின்...