×

பொக்லைன் மோதியதில் அதிமுக பிரமுகர் காயம்

கொள்ளிடம், நவ.6: நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் சீர்காழி ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் அப்பு என்கிற ராமச்சந்திரன் (30). இவர் சீர்காழியிலிருந்து கோடங்குடி கிராமச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நின்று சாலையின் ஓரத்தில் மண் எடுத்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான ஜேசிபி எந்திரத்தின் பெரிய பக்கெட்டில் மோதியதில் கீழே விழுந்த ராமச்சந்திரனின் வலது கால் முறிந்து சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED காயத்துடன் சுற்றித் திரிந்த...