×

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செயலுக்கு தமிழ் சங்கம் கண்டனம்

மயிலாடுதுறை, நவ.6: தஞ்சையை அடுத்துள்ள பிள்ளையார்பட்டியில் அய்யன் திருவள்ளுவரின் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ள செயலினை மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் திருவள்ளுவரின்சிலை தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் 5அடி பீடத்தில், 4அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் மீது சமூக விரோதிகள் மற்றும் தமிழின துரோகிகள் சாணத்தை வீசி, பேப்பரால் கண்களை மூடிச் சென்றுள்ளனர். இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக காவல் துறையினர் உடனே நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தக்க தண்டணை வழங்க வேண்டும்.
தொடர்ந்து இது போன்ற சிலை அவமதிப்பு செயல்கள் எங்கும் இனிய நடக்காமல் இருக்க, தமிழக அரசு உடனே கடும் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Union ,Tiruvalluvar ,
× RELATED புதுக்கோட்டையில் நாளை கருணாநிதி சிலை...