கரூர் நகராட்சி பகுதி டீக்கடைகளில் தரமற்ற டீத்தூள் பயன்பாடா?

கரூர், நவ. 6: கரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள சில டீக்கடைகளில் தரமற்ற டீத்துள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து கண்காணிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நகரமான கரூரைச் சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட டீக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல செயல்பட்டு வரும் சில டீக்கடைகளில் தரமற்ற டீத்துள்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த கரூரில், டீ ஒன்றுதான் இவர்களுக்கு முக்கியமான ஒன்றாக உள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு, கலப்பட டீத்துள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் இந்த டீத்துள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்த கடைகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டதாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நகராட்சி பகுதிகளில் செயல்படும் டீக்கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கலப்பட டீத்துள் பயன்பாட்டில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur Municipal Area ,
× RELATED குழந்தை மீட்புப் பணிக்காக கொண்டு...