×

சின்னாண்டாங்கோவிலில் சாலையோரத்தில் திறந்து கிடக்கும் குழாயால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், நவ. 6: மூடப்படாத குழியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் சின்ன ஆண்டாங்கோயில் சாலையோரம் குடிநீர் குழாயை சரிசெய்வதற்காக குழிதோண்டப்பட்டது. பணி முடிந்ததும் குழியை மூடாமல் சென்றுவிட்டனர். குழி அப்படியே விடப்பட்டுள்ளதால் அந்த இடத்தில் ஒருகுச்சியை நட்டு வைத்துள்ளனர்.
இரவுநேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருவோர் குழி இருப்பது தெரியாமல் தடுமாறி வருகின்றனர். ஒருசிலர் கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நேரும்முன்னர் சாலைப்பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுகக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,road ,
× RELATED பாகல்கோட்டையில் பரவசம்: ஆடுகள்...