×

பிரதான குழாயில் உடைப்பு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

உடுமலை,நவ.6: உடுமலை அருகே வாளவாடி சாலையில் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில்  உடைப்பு ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறது.

இதில் 4வது கூட்டு குடிநீர் திட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையில் இருந்து வாளவாடி சாலையில் பிரதான குழாயில் கடந்த ஒரு வார காலமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல வெளியேறி வீணாகிறது.
இரவும் பகலுமாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் யாருக்கும் பயனின்றி தென்னந்தோப்பிற்கள் பாய்ந்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரிய  அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : break ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...