×

நீலகிரி அதிமுகவில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல்

ஊட்டி, நவ. 6: நீலகிரி மாவட்ட அதிமுகவில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் அரங்கேறியுள்ளது. மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. அர்சுணன் கோஷ்டியினர் சென்னைக்கு சென்று தலைமை கழகத்தில் புகார் அளித்துள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட அதிமுகவினர் கடந்த 10 ஆண்டுகளாகவே இரு பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி.யுமான அர்சுணன் ஒரு கோஷ்டியாகவும், தற்ேபாதைய மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான முன்னாள் ஊட்டி எம்.எல்.ஏ.வான மறைந்த கே.ஆர்.ராஜூவின் சகோதரர்தான் அர்சுணன். எம்ஜிஆர் மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்த போது, ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான கே.ஆர்.ராஜூவிற்கு ஜெயலலிதாவிடம் தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆனால், அவர் மரணமடைந்ததால், அவரது சகோதாரர் அர்சுணனுக்கு மாவட்ட செயலாளர், ராஜ்ய சபா எம்.பி. என பல்வேறு பதவிகளையும் வழங்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் தீவிர தொண்டனான அர்சுணனும் கட்சிக்காக பாடுப்பட்டார். தன்னை நாடி வரும் தொண்டர்களை கவனிப்பதில் கைதேர்ந்தவர். மேலும், ஜெயலலிதா இருந்தவரை, அவர் கோடநாடு எஸ்டேட்டிற்கு வரும் போதேல்லாம், அவரே அசந்து போகும் வகையில் வரவேற்பு அளிப்பார். ஜெயலலிதா மறைவிற்கு பின், ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்ற இரு தலைமை உருவெடுத்தபோதிலும், ஈபிஎஸ் பக்கமே அர்சுணன் இருந்தார். மேலும், கட்சியில் இருந்து பெரிய தலைகள் யாரும் வேறு அணிக்கு செல்லாமல் பாதுகாத்து வந்தார். இந்த நிைலயில் கடந்த 8 மாதங்களுக்கு அர்சுணனின் மாவட்ட செயலாளர் பதவி திடீரென பறிக்கப்பட்டது. புத்திசந்திரன் மீண்டும் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால், இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டதாக பேசப்பட்டது. இந்த பதவி பறிப்பு நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவிற்கு நீலகிரியில் பின்னடைவு ஏற்படும் என கருத்து இருந்தது. அதேபோல், பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் அதிமுக தோற்றதால், நீலகிரி தொகுதி பற்றி பேச்சு காணாமல் போய்விட்டது. இந்நிலையில், மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற புத்திசந்திரன், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அர்சுணன் கோஷ்டியில் இருந்த பலரது கூட்டுறவு சங்க தலைவர்கள் பதவிகளை பறித்தார். தொடர்ந்து, கட்சி பதவிகளையும் பறிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு இதுவரை தலைமை ஒத்துக் கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது புத்திசந்திரன் மீது பல்வேறு புகார்கள் தலைமைக்கு செல்லவே, அதனை முறியடிக்க கடந்த வாரம் புத்திசந்திரன், தனது ஆதரவாளர்களுடன் சென்னை பறந்தார். சென்னையில் முகாமிட்டிருந்த அவர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர் அர்சுணன் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளனர். அப்போது, தலைமை கழக நிர்வாகிகள் சிலர், பதவியிலேயே இல்லாத ஒருவரை பற்றி நீங்கள் எதற்காக புகார் கூறுகிறீர்கள்? என கேட்டுள்ளனர். அப்போது, அவர் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்ற ஒரு புகாரை தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லா மாவட்டங்களிலும் நடக்கும் சாதாரண விஷயம்தாேன என புகார் கூறச் சென்றவர்களை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதனால், சென்னைக்கு சென்ற புத்திசந்திரன் ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இதற்கிடையில், அர்சுணன் ஆதரவாளர்கள் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் மீது அடுக்கடுக்காக புகார்களை கூறியுள்ளனர்.

ஒரு பெரிய கோப்பாக புகார்களை தயாரித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சிடம் கொடுத்துள்ளனர். இந்த புகார்களை பெற்றுக்கொண்ட தலைமை, ஏன் இப்படி இரு தரப்பினரும் அடித்துக் கொள்கிறீர்கள்?. உள்ளாட்சி தேர்தல் நெருங்கிய நிலையில், இது போன்ற கோஷ்டி மோதல், கட்சியை அழித்துவிடும். ஒழுங்காக இரு தரப்பினரும் வேலையை பாருங்கள் என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அல்லாத ஒருவரை மாவட்ட செயலாளராக்கும் முடிவிற்கு தலைமை வந்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், விரைவில் நீலகிரி மாவட்ட அதிமுகல் பல்வேறு மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : clash ,Nilgiris ,premises ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்