×

ரூ.18 லட்சம் செலவில் விளாமுண்டி வனச்சரக அலுவலக கட்டுமான பணி துவக்கம்

சத்தியமங்கலம், நவ.6: விளாமுண்டி வனச்சரக அலுவலக கட்டுமான பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், சத்தியமங்கலம் மற்றும் ஆசனுார் வனக்கோட்டங்களில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனுார், தாளவாடி, கேர்மாளம் ஆகிய ஏழு வனச்சரகங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், நிர்வாக வசதிக்காக, சில வனச்சரகங்கள் எல்லை பிரிக்கப்பட்டு, கூடுதலாக விளாமுண்டி, கடம்பூர் மற்றும் ஜீரஹள்ளி என மூன்று வனச்சரகம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதையடுத்து,  வனச்சரகங்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட வனச்சரகங்களுக்கு, கடந்த ஏப்.1 முதல் வனச்சரக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய வனச்சரகங்களுக்கு, அலுவலக கட்டிடங்கள் இல்லாததால், அப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் தற்காலிகமாக வனச்சரக அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், விளாமுண்டி வனச்சரகத்துக்கு புதிய அலுவலகம் கட்ட ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான இடம் விளாமுண்டி வனப்பகுதியில், நால்ரோடு அருகே, தேர்வு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. விளாமுண்டி வனச்சரகர் அமுல்ராஜ், புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

Tags : Commencement ,Valamundi Forest Office ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...