×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற மின் ஊழியர்கள் கைது

ஈரோடு, நவ. 6:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு மின் ஒப்பந்த தொழிலாளர்கள் 70 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். முன்னதாக, ஈரோடு ஈவிஎன் ரோட்டில் உள்ள மண்டல தலைமை மின் பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
இதில், 1998ம் ஆண்டுக்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும். 2008ம் ஆண்டுக்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி ரூ.380ம், கேங்மேன் பதவியில் தேர்வு  இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தானே, வர்தா, ஒகி, கஜா புயல் பேரிடர் காலங்களில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈவிஎன் ரோட்டில் சாலை மறியில் ஈடுபட முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஜிஹெச் போலீசார், மின் ஒப்பந்த தொழிலாளர்கள் 70 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags : Power workers ,
× RELATED மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப...