×

உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம்

கோவை, நவ. 6:  விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காந்திபுரம் வி.கே.கே.ேமனன் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் ேநற்று நடந்தது. மாநில தேர்தல் பணி துணை செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் சிறப்புரையாற்றினார். இதில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், மதிமுக அங்கம் வகிக்கிற திமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவோம், மாநகரில் 100 வார்டுகளிலும் உடனடியாக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி, மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில்,  நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜூனராஜ், கிருஷ்ணசாமி, வக்கீல் சூரி.நந்தகோபால், கணபதி செல்வராஜ், தூயமணி, வெள்ளிங்கிரி, தங்கவேல், முருகேசன், லூயிஸ், கோட்டை ஹக்கீம், பழனிசாமி, ராமநாதன், சம்பத், அப்துல்பாரி, விஸ்வராஜ், மாலிக், பாரத் மயில்சாமி, பேங்க் குமாரசாமி, பெ.முருகேசன், விஜயகுமார், பயனியர் தியாகு, மார்க்கெட் செல்வம், புதூர் சந்திரசேகர், அருள், திலக்பாபு, கோபாலகிருஷ்ணன், அன்னபூரணி பாலு, கோவை அசோக் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,coalition victory ,council elections ,
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா