லிங்காபுரத்தில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் விசைப்படகு இயக்கம்

மேட்டுப்பாளையம், நவ.6:  லிங்காபுரத்தில் நேற்று முதல் பாதுகாப்பு உபகரணங்களுடன் விசைப்படகு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 மேட்டுப்பாளையம் அருகே உள்ள லிங்காபுரத்தில் இருந்து மொக்கை மேடு காந்தவயல் உளியூர் ஆகிய மலை கிராமங்களுக்கு மலைவாழ் மக்கள் செல்வதற்காகவும் அந்தப் பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் சென்று வருவதற்காகவும் கடந்த 2004ம் ஆண்டு கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால் மலை கிராமத்தில் இருந்து நகர் பகுதிக்கு வரக்கூடிய பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் வருவாய்த்துறை சார்பில் நேற்று முதல் பாதுகாப்பு உபகரணங்களுடன் (லைப் ஜாக்கெட்) 10 பேர் அமர்ந்து செல்லக்கூடிய விசைப்படகு இயக்கப்பட்டது.

Tags :
× RELATED தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் மக்கள்...