×

எஸ்.முருகையன் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு

திருவண்ணாமலை, நவ.6:  திருவண்ணாமலை எஸ்.முருகையன் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர்.திருவண்ணாமலை கீழ்அணைக்கரையில் உள்ள எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி டென்னிஸ் அகாடமியில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் எஸ்.முருகையன் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி அறக்கட்டளை தலைவர் சீனி.கார்த்திகேயன், செயலாளர் மற்றும் தாளாளர் அருள்விழி கார்த்திகேயன், நிர்வாக இயக்குனர் காயத்ரி, தலைமை ஆசிரியர் ஆனந்தன், இடைநிலை தலைமை ஆசிரியர் ராஜேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.மகேந்திரபாபு, எம்.மணிகண்டன் உட்பட ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.

Tags : S.Murukayan School ,tennis tournament ,
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி