×

செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் தட்டுப்பாடின்றி மணிலா விதை வழங்க வேண்டும்

செய்யாறு, நவ.6:  செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் தட்டுப்பாடின்றி மணிலா விதை வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ கி.விமலா தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் கூறியதாவது: அனக்காவூர் வட்டாரத்தில் நிரந்தர வேளாண்மை உதவி இயக்குனர் நியமிக்க வேண்டும். நகரிலும், நெடுஞ்சாலைகளிலும் ஆள் உயரத்தில் புதர் மண்டி கிடப்பதை உடனடியாக சீரமைக்க வேண்டும். செய்யாறு, ெவம்பாக்கம் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்துள்ள நிலையில் தட்டுப்பாடின்றி மணிலா விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பசுமை வீட்டிற்கு ஊராட்சி ஒன்றியங்களில் வெளிப்படையாக ₹25 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர். பூதேரி புல்லவாக்கத்தில் ₹23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஏரிக்கரை சீரமைப்பு தரமானதாக இல்லை. அதனை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : talukas ,Manila ,Vembakkam ,
× RELATED டூவீலரில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி