×

அரசாணிமங்கலம் கிராமத்தில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்: தொற்று நோய் பீதியில் மக்கள்

உத்திரமேரூர், நவ.6: உத்திரமேரூர் அருகே அரசாணிமங்கலம் கிராமத்தில் கழிவுநீருடன் கலந்து வரும் குடிநீரால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த  அரசாணிமங்கலம் கிராமத்தில் 1000க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு, அதே கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்து, அதில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது. இதுபோல் வினியோகம் செய்யும் பைப்லைன்களை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், குழாய்களில் அங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர்ருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும்,  இதுபற்றி பலமுறை புகார் செய்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால், கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்து மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த குடிநீரை பயன்படுத்து கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம், டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி கலெக்டர் முதல் ஊராட்சி  நிர்வாகம் வரை அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்துவிட்டோம். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதில், மாவட்ட நிர்வாகம், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து,  உடைப்பு ஏற்பட்டுள்ள குழாய்ககளை மாற்றி அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Rajamanimangalam ,epidemic ,panic ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...