×

கிளாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் குண்டும் குழியுமான சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

கூடுவாஞ்சேரி, நவ. 6: கிளாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில், குண்டும் குழியுமான சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், ரயில் பணிகள் கடும் சீரமம் அடைகின்றனர். வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம்  ஊராட்சியில் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதில், 1வது வார்டுக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் பகுதியிலும், ஓட்டேரியில் ரயில்வே மேம்பால பணி மந்தமாக நடக்கிறது. இதனால், அங்குள்ள  ரயில்வே கேட், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த கிளாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து செல்லியம்மன் நகருக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் பிரதான சாலை, கடந்த பல ஆண்டுகளாக குண்டும்,  குழியுமாக காணப்படுகிறது. அதேபோல், ரயில்வே பார்டரை ஒட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் 30அடி சாலையும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு பல்லாங்குழியாக மாறிவிட்டது. அதில், தற்போது பெய்த மழைநீர் தேங்கி குளம், குட்டை  போன்றும், சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கிறது.

இதனால், செல்லியம்மன் நகர், பத்மாவதி நகர், சக்தி நகர், தேவேந்திர நகர் மற்றும் ஓட்டேரி பகுதியில் வசிக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் கடும்  அவதியடைகின்ற
னர். இதையொட்டி, பொதுமக்கள் 3 கிமீ தூரம் வண்டலூருக்கும், ஊரப்பாக்கத்துக்கும் சுற்றி செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை, பொதுமக்கள் முறையிட்டனர். அதற்கு, நிதி ஆதாரம்  இல்லை என்ற பதில் மட்டுமே தருகின்றனர். சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் கண்டும், காணாமல் உள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே,  ரயில்வே மேம்பால பணி முடியும் வரை மக்களின் சிரமத்தை போக்க ஓட்டேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை உள்ள ரயில்வே பார்டர் 30அடி கொண்ட சாலையையும், பிரதான சாலையையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட  நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...