×

வடநெம்மேலி பாம்பு பண்ணையில் தமிழக இருளர்கள் குறித்து நேபாள நாட்டினர் ஆய்வு

திருப்போரூர், நவ.6: வடநெம்மேலி பாம்பு பண்ணையில், தமிழக இருளர்கள் குறித்து நேபாள நாட்டு தொண்டு நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.பல்லுயிர் பெருக்கம் மற்றும் அதில் இருளர் பழங்குடி மக்களின் பங்கு குறித்தும், அவர்களின்  வாழ்வியல் முறைகள், வருவாய் ஈட்டுதல் குறித்து ஆய்வு செய்வதற்காக நேபாள நாட்டு  தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 19 பேர் கொண்ட குழுவினர் இந்தியா வந்துள்ளனர்.இதைதொடர்ந்து நேற்று முன்தினம் சென்னையில் அரசு  அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்ட அவர்கள், நேற்று திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையாளர் பிரகாஷ்பாபு தலைமையில் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆலோசனையில்  ஈடுபட்டனர். இதையடுத்து வடநெம்மேலியில் உள்ள முதலை பண்ணைக்கு சென்றனர். அங்கு இருளர்கள் கூட்டுறவு சங்கம் அமைத்து செயல்படுத்துதல், பாம்பு பிடித்தல், பாம்பில் இருந்து விஷம் எடுத்தல், அவற்றின் மூலம் வருவாய் ஈட்டுதல்,  அவர்களின் வாழ்வியல் முறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.  நேபாள நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இதுபோன்று கூட்டுறவு சங்கங்களை அமைத்து தருவது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்  திருப்போரூர் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...